×

அந்த நாள் ஞாபகம்… பாலைவனப் புயல் சுழன்றடித்த நாள்

ஷார்ஜாவில் 1998ம் ஆண்டு நடந்த கோகோ கோலா கோப்பை தொடரில், ஏப்ரல் 22ம் தேதி நடந்த போட்டியில் இந்தியா  ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. பெவன் 101, மார்க் வாஹ் 81 ரன் விளாசினர்.
பாலைவனப் புயல் காரணமாக ஆட்டம் 25 நிமிடத்துக்கு தடைபட்டதால்,  இந்திய அணி வெற்றி பெற 46 ஓவரில் 276 ரன் எடுக்க வேண்டும் அல்லது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 46 ஓவரில் 237 ரன் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

தொடக்க வீரர் சச்சின் டெண்டுல்கரின் விளாசலால் இந்தியா 46 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்து பைனலுக்கு முன்னேறியது. சூறாவளியாக சுழன்றடித்த சச்சின் 131 பந்தில் 143 ரன் (9 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார்.  அடுத்து ஏப்ரல் 24ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த பைனலிலும் சச்சின் 131 பந்தில் 134 ரன் விளாசி (12 பவுண்டரி, 3 சிக்சர்) கோப்பை வெல்ல உதவியது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாறு.



Tags : desert storm , Sachin Tendulkar, player of the Coca-Cola Cup series, India, Australia
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது குஜராத் அணி